Sunday, September 26, 2010

அரேபியர் கால விஞ்ஞானம்

கி.பி. 600 க்கும் 13ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்துக்கும் இடைப்பட்ட காலம் பண்டைய ஆரேபியரின் விஞ்ஞான அறிவின் எழுச்சிக் காலமாகும். கிரேக்க சிந்தனைகளை அரேபியர்கள் நூல்வடிவில் மொழிபெயர்த்து அவற்றை அனுபவ பூர்வமாக தொகுத்து அளித்தவர்கள் ஆவர். பைதரகரசு, அரிஸ்டோட்டில், ஆக்கிமிடிஸ், பிளட்டோ, தொலமி போன்றோரின் மூல நூல்கள் அரபு மொழியல் மொழிபெயர்க்கப்பட்டதால் வானியல், ஒளியியல், இரசாயனவியல், இருத்துவம், கேத்திர கணிதம், அட்சர கணிதம் போன்ற துறைகளில் அரேபிய விஞ்ஞானம் வளர்ச்சியடைந்தது. புவியியல், வானியல் போன்ற அறிவுத்துறைகளில் அரேபியர்கள் மிகவும் அறிவுடையவர்களாக விளங்கினர். தமது உயிர் வாழ்க்கைக்கும், சமய வாழக்கைக்கும் வானியலையும், கணிதத்தையும் நன்கு பயன்படுதுதினர். இதற்காக வானிலை அவதான நிலையங்களை அமைத்திருந்தனர். வானிலை ஆய்வுக்காக நுட்பமான ஆய்வுக்கருவிகளைக் கண்டுபிடித்து பயன்படுத்தினர். சரி நுட்பமான வானியல் அட்டவணைகளையும் நட்சத்திர அட்டவணைகளையும், சதந்திர நாட்காட்டிகளையும் அனுபவரீதியாக தொகுத்துப் பயன்படுத்தினார்கள். கி.பி. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோஜா பேக்கன் என்ற விஞ்ஞானியின் ஒளியியல் கணிதக் கருத்துக்களை ஆதாரங்களாகக் கொண்டு ஒளி பற்றிய ஆய்வில் சிறப்பான பங்கினை வகித்தனர். கி.பி. 965ம் ஆண்டில் பிறந்த இன்னு அல் ஹைத்தாம் கணிதம், பெளதீகம், வானியல், மருத்துவம் போன்ற துறைகளில் அறிஞராக விளங்கினார். இவரது ஒளியியல் தொடர்பான ஆய்வுகள், கருத்துக்கள் சமகாலத்தில் வாழும் பெளதீகவியலாளர்களால் வரவேற்கப்படுகின்றன.


அரேபியர்களின் மற்றுமொரு சிறப்பானதொரு பங்களிப்பு இரசாயனவியலுக்குரிய கருத்துக்களை முன்வைத்தமையாகும். அரேபியர்கள் இரவாதத்தை அனுபவபூர்வமாக ஆய்வுகூட பரிசோதனைகள் மூலம் நிறுவ முயன்றனர். மூஸா அல் - கவாரிஸ்மி அட்சரகணிதத்திலும், எண்கணிதத்திலும் நூல்களை எழுதினார். இந்நூல்களில் கணிசமான அளவு புதிய விடயங்கள் இருந்தன. ஜாபீர் பின் அப்துல்லா தலைசிறந்த வானியல் கணிதவியலாளராக கருதப்படுகின்றார். இவர் திரிகோண கணிதத்தில் புதிய கண்டுபிடிப்புக்களைச் செய்தார். அபுமூஸா ஜாபீர் இப்னுகையான் புகழ்பெற்ற இரசவாதியும் இரசாயன வியலாளரும் ஆவார். இவர் இரசாயன ஆய்வில் நீள்தல், ஒடுக்கம் ஆகிய இரண்டிற்கும் விஞ்ஞான ரீதியான விளக்கமளித்தார். ஆவியாகி நீள்தல், உருகுதல், படிகமாதல் ஆகியவற்றிற்கான முறைகளையும் அவர் செம்மைப்படுத்தினார். எனவே வானியல், புவியியல், கேத்திர கணிதம் வடிவ கணிதம், ஒளியியல், இரசவாதம், வைத்தியம் போன்ற துறைகளில் அரேபியரின் பங்களிப்பு சிறப்பாக அமைந்திருந்தது என்றால் அது மிகையாகாதுஅரேபியர்களின் மற்றுமொரு சிறப்பானதொரு பங்களிப்பு இரசாயனவியலுக்குரிய கருத்துக்களை முன்வைத்தமையாகும். அரேபியர்கள் இரவாதத்தை அனுபவபூர்வமாக ஆய்வுகூட பரிசோதனைகள் மூலம் நிறுவ முயன்றனர். மூஸா அல் - கவாரிஸ்மி அட்சரகணிதத்திலும், எண்கணிதத்திலும் நூல்களை எழுதினார். இந்நுhல்களில் கணிசமான அளவு புதிய விடயங்கள் இருந்தன. ஜாபீர் பின் அப்துல்லா தலைசிறந்த வானியல் கணிதவியலாளராக கருதப்படுகின்றார். இவர் திரிகோண கணிதத்தில் புதிய கண்டுபிடிப்புக்களைச் செய்தார். அபுமூஸா ஜாபீர் இப்னுகையான் புகழ்பெற்ற இரசவாதியும் இரசாயன வியலாளரும் ஆவார். இவர் இரசாயன ஆய்வில் நீள்தல், ஒடுக்கம் ஆகிய இரண்டிற்கும் விஞ்ஞான ரீதியான விளக்கமளித்தார். ஆவியாகி நீள்தல், உருகுதல், படிகமாதல் ஆகியவற்றிற்கான முறைகளையும் அவர் செம்மைப்படுத்தினார். எனவே வானியல், புவியியல், கேத்திர கணிதம் வடிவ கணிதம், ஒளியியல், இரசவாதம், வைத்தியம் போன்ற துறைகளில் அரேபியரின் பங்களிப்பு சிறப்பாக அமைந்திருந்தது என்றால் அது மிகையாகாது