Sunday, September 26, 2010

சுயநல பரிணாமவாதிகள் பின்னும் புதிய சதி வலைகள்:

சமீப காலமாக துருக்கி மற்றும் உலக மீடீயாக்களில் உலகலாவிய ரீதியில் டார்வினிசத்தின் தோல்வியை பற்றி அதிர்ச்சி செய்திகளை வெளியிட்டுள்ளன. பரிணாமம் தோற்கடிக்கபட்டமை ஜரோப்பிய ப்ரீ மேசன் மற்றும் இதர இரகசிய சக்திகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவைகள் நாத்திகம் தோற்கடிக்கபட்டு விடும் என்ற பயத்தில் பெரும் சதிவலை பின்னுகின்றன. பிரித்தானிய மற்றும் பிரஞ்சு செயலில் இறங்கியுள்ளன. பழிதீர்பதற்காக சபாதிய குடும்பங்கயுளும் இதில் ஈடுபடுகின்றன. பல எழுத்தாளர்கள் வாடகைக்கு அமர்தப்பட்டு பெரும் சதி செய்யப்படுகிறது. இதில் முக்கிய குறியாக கருதப்படுவது விஞ்ஞான ஆய்வு கழகமாகும். எதிர்காலத்தில், இறந்த காலத்தை போன்று இவை பலன் தரப்போவதில்லை. மில்லியன் கணக்கான மக்கள் தற்போது நடந்து கொண்டிருப்பவற்றை பார்த்து கொண்டிருக்கின்றனர். ஒரு புதிய சூரியன் உதயமாகிவிட்டது. அதன் ஒளி உலகம் முழுவதும் ஒளியூட்டுகிறது. உண்மையை ஏற்று கொள்வது தான் பரிணாமவாதிகளுக்கு எஞ்சியுள்ள ஒரு விருப்பாகும்.  இஸ்லாம் பல தெய்வ வணக்கங்களை தான் எதிர்கிறது : விஞ்ஞானத்தை அல்ல.விஞ்ஞானத்தின் அனைத்து கிளைகளையும் பரிசோதித்து ஆய்வு செய்யுமாறு மக்களை வற்புறுத்துகிறது :..............வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து ....... (சூரத் ஆல-இம்ரான் : 191) மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை அமைத்து, அதை அழகு செய்து, அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (சூரத் காப்ஃ : 6) ...............(மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர்¢ பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்!....... (சூரத் முல்க் : 3)  ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று - வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும - மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? - பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?) (சூரத் காஷியா 17-20)
 நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் அத்தாட்சிகள் இருக்கின்றன. இன்னும் உங்களைப் படைத்திருப்பதிலும், அவன் உயிர்ப் பிராணிகளைப் பரப்பியிருப்பதிலும் (நம்பிக்கையில்) உறுதியுள்ள சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. (சூரத் ஜாஸியா 3-4) ஆகவே விஞ்ஞானத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையில் தொடர்பு இல்லை என்று கூற முடியாது.
 இஸ்லாம் பொய்யான மதங்களை எதிர்கிறது. அது நெருப்பு, மிருகங்கள், சிலைகள் - போன்றவற்றை வணங்குவதை எதிர்கிறது. சுருங்க சொன்னால், அனைத்துவித பலதெய்வ கொள்கைகளையும் எதிர்கிறது. ஷாமன மதம் இயற்கையையும் (மிருகங்கள், தாவரங்கள், கற்கள், பூமி, அணு) மற்றும் தற்செயலையும் (உhயபெந) வணங்குகிறது. டார்வினிசம் ஷாமன கோட்பாடுகளை கொண்டிருப்பதால் அது இஸ்லாத்துடன் மோதுகிறது.