இஸ்லாமியக் கொள்கையில் ஆழ்நத ஞானமும்,உறுதியும் வே ண்டும். இல்லையெனில் தனது தவறான கெள்கையின் பால் மக்களை திசைதிருப்பிவிடுவார்கள்.
குர்ஆனுகுக்கு குர்ஆனைக் கொண்டே விளக்கமளிக்கவேண்டும். ஓரிடத்தில் சில வசனங்கள் தெளிவில்லாமலிருக்கும். மற்றொரு இடத்தில் அதை விளக்கும் வேறொரு வசனம் வரும். பிறிதொரு இடத்தில் ஒரு வசனம் சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கும.இன்னொரு இடத்தில் அதே வசனம் வரிவாகக் கூறப்பட்டிருக்கும்.இவற்றைத் தெளிவாகத் தெரிந்து குர்ஆனிலிருந்தே குர்ஆனை வளக்கவேண்டும்.
குர்ஆனுக்கு ஸுன்னாஹ் (ஹதீஸ்கள்) விரிவுரையாகவும், தெளிவு ரையாகவும் அமைந்திருக்கும். அவ்வாறு விளக்கப்பட்டிருக்கும் வசனங்களை ஹதீஸ்கள் வாயிலாகவே விவரிக்கவேண்டும். ஏனெ னில் “நான் குர்ஆனையும், அதைப்போன்ற ஒன்றையும் வழங்கப் பட்டிருக்கிறேன்” என நபி (ஸல் அவர்கள் கூறியுள்ளனர். அது போன்ற ஒன்று என்பது ” ஸுன்னா” வாகும்.
ஸுன்னாவில் அதைப் புரிந்து கொள்ளும் ஆதாரம் கிடைக்காத போது நபி (ஸல் ) அவர்களிடம் கேட்டுத் தெரிந்த நபித் தோழர்களின் சொல் விளக்கத்தின் வாயிலாகப் புரிந்து கொளளவேண்டும். ஏனெனில் குர்ஆன் அருளப்படுவதை நேரிலே கண்டு கற்றுத்தேறியவர்கள்.அவை பற்றிய முழுமையான அறிவு விளக்கமும், தெளிவும் பெற்றுத்தங்கள் வாழ்விலே செயல்படுத்தியவர்கள்.
குர்ஆனிலோ, ஸுன்னாவிலோ, நாயத்தோழர்களின் தீர்ப்புகளிலோ அதற்குரிய தெளிவோ, ஆதாரமோ கிடைக்காத போது ஸஹாபாக்க ளிடம் மண்டியிட்டு தஃப்ஸீர்களைப் பயின்ற தாபியீன்களின் தீர்ப்பு களைக் கொண்டு குர்ஆன் வசனங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இவையே பெரும் பாலான இமாம்களான மேதைகள் கடைபிடித்து வந்த நெறிமுறை யாகும்.
குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டுள்ளதால் அம்மொழி பற்றிய ஆழமான புலமை இருக்கவேண்டும்.
“அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பும் ஒருவர் அரபிமொழிப் புலமை இல்லையெனில் இறைவேதத்திற்கு விளக்கம் கூற தகுதியற்றவர்” என்று தப்ஸீர் கலை மேதை இமாம் முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
ஆகவே, முஃபஸ்ஸிர் (விரிவுரயாளர்) முஸ்லிமாகவும், கீழ்காணும் பதினைந்து கலைகளைக் கற்றுத் தேறியவராகவும் இருக்கவேண்டும்.
அந்த 15 கலைகள் யாவை?
அல்லுகத் (அகராதி ஞானம்) ,
அந்நஹ்வு ( சொற்புணர்ச்சி இலக்கணம்,
அஸ்ஸர்பு , அத்தஸரீஃப் (சொல்லிலக்கணம்),
அல்இஷ்திகாக் (சொற்களின் தாது இலக்கணம்)
அல்மஆனி (அணி இலக்கணம்
இல்முல் பதீஉ (அருங்கலை),
கிராஅத் (ஓதும் கலை)
இல்முல் அகாயித்,
உஸூலுல் ஃபிக்ஹ் ( இஸலாமிய சட்ட ஞானத்தின் அடிப்படைக்கலை),
இல்முல் பயான் ( உரை இலக்கணம்),
அஸ்பாபுந் நுஸூல் (குர்அன் வசனங்கள் இறங்கிய காலம்,காரணம் பற்றிய கலை)
அந்நாஸிக்,வல்மன்ஸூக் ( மாற்றுவதும், மாற்றப்பட்டதுமான வசனங்கள் பற்றிய விவரம்),
அல்பிக்ஹ் (சட்ட ஞானம்)
அல்அஹாதீதுல் முபய்யினா லி தஃப்ஸீரில் முஜ்மல் வல்முப்ஹம் (மறைமுகமான பொருள் பற்றி நபி(ஸல்) விளக்கிய கலை)
இல்முல் மூஹிபா (இறுதியாக இறைவனின் தனிப் பெரும் ஞானம் பெற்றிருத்தல்)
இஸ்ரேலர்கள் 72 கூட்டங்களாக பிரிந்தார்கள். எனக்குப் பின் என்னுடைய உம்மத்துக்கள் 73 கூட்டமாக பிரிவார்கள். அதில் ஒரு கூட்டத்தார் மாத்திரம் சுவர்க்கவாசிகள். மற்றைய 72 கூட்டத்தினரும் வழித்தவறியவர்களாவார்கள் என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியபோது, அண்மையில் இருந்த ஸஹாபாக்கள் " அல்லாஹ்வின் திருத்தூதரே! அந்த ஒரு கூட்டத்தினர் யார்? என்பதை எங்களுக்கு தெரிவியுங்கள்" எனக் கேட்க. நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் " நானும், என்னுடைய ஸஹாபாக்களும் நடக்கின்ற வழியை பின்பற்றி நடப்பவர்கள் தான் அந்த கூட்டத்தினர்" எனக் கூறினார்கள். இந்த கூட்டத்தினரே ஸுன்னத் வல் ஜமாஅத் எனப்படுபவர்கள்.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியபடி. 73 கூட்டத்தில் ஸுன்னத் வல் ஜமாஅத் நீங்கலாக மற்ற 72 கூட்டத்தினரும் ஆரம்பத்தில் ஆறு பிரிவுகளை கொண்டவர்களாக இருந்தார்கள். இந்த ஆறில் ஒவ்வொன்றும் பன்னிரண்டு பிரிவுகளாக பிரிந்ததினால் அவர்கள் 72 கூட்டத்தினர்களாக ஆனார்கள். அந்த மத்ஹபுகளின் விளக்கமும், கொள்கைகளும் பின்வருமாறு: -
1. ராபிளிய்யா, 2. காரிஜிய்யா, 3. ஜபரிய்யா, 4. கதரிய்யா, 5. ஜுஹைமிய்யா, 6. மர்ஜிய்யா என்ற ஆறு பிரிவுகளாகும்.
ராபிளிய்யா, காரிஜிய்யா, ஜபரிய்யா என்ற இந்த மூன்று கூடத்தார்களும் பொதுவாக ஷீயா என்ற பெயரால் அழைக்கப்படுகின்றார்கள்.
* ராபிளிய்யா என்ற பிரிவில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் :
1. அலவிய்யா 2. பதாஇய்யா 3. ஷீய்யா 4. இஸ்ஹாக்கியா 5. ஸெய்திய்யா 6. அப்பாஸிய்யா 7. இமாமிய்யா 8. நாவிஸிய்யா 9. முதனாசிகிய்யா 10. லாஇனிய்யா 11. ராஜிஇய்யா 12. முதராபிஸிய்யா எனப்படும்.
இவர்களின் கொள்கை:
தராவீஹ் தொழுகை ஸுன்னத் இல்லை, தொழுகைக்கு இமாம் ஜமாஅத் ஸுன்னத் இல்லை, வுழு செய்யும் போது தலையில் மஸ்ஹு செய்தல் ஜாயிஸ் இல்லை, அதோடு அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹுமா) இந்த மூன்று கலீபாக்களை பற்றி அவதூறு கூறுவார்கள். இவர்களுக்கிடையில் சில செயல்களில் வேறுபட்ட அபிப்பிராய பேதங்களும் உண்டு. அதாவது அலவியாக்கள் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை நபி என்று கூறுகிறார்கள். பதாஇய்யாக்கள் நபி பட்டத்தில் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கும் பங்கு உண்டு என்கின்றனர்.
* காரிஜிய்யா என்ற இந்த மத்ஹபில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் :
1. அஸ்ரகிய்யா, 2. இபாளிய்யா, 3. ஸஃலபிய்யா, 4. ஹாஸிமிய்யா, 5. கலபிய்யா, 6. கூஸிய்யா, 7. கன்ஸிய்யா, 8. ஷிம்ராக்கிய்யா, 9. முஃதஸிய்யா, 10. மைமூனிய்யா, 11. மஹ்கமிய்யா, 12. அக்னஸிய்யா எனப்படும்.
இவர்களின் கொள்கை:
ஜமாஅத்து தொழுகை உண்மை இல்லை, கிப்லா உடையவர்கள் பாவத்தை கொண்டு காபிர் ஆவார்கள், அநீதி உடைய அரசனுக்கு விரோதம் செய்து விலகுவது நலம், இவர்களில் கன்ஸிய்யாக்கள் ஸகாத் ஃபர்ளு அல்ல என்றும் முஃதஸிய்யாக்கள் தீமையானது அல்லாஹ்வின் நாட்டத்தை கொண்டதல்ல என்றும் பாஸிகீன்களுக்கு பின்னால் தொழுவது ஆகுமானது அல்ல என்றும் கூறுவதோடு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஷபாஅத், அவ்லியாக்களின் கராமத் இவைகள் இல்லை என்று மறுக்கிறார்கள்.
* ஜபரிய்யா என்ற இந்த மத்ஹபில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் :
1. முளுதர்றிய்யா, 2. அப்ஆலிய்யா, 3. மஇய்யா, 4. மப்ரூகிய்யா, 5. நஜ்ஜாரிய்யா, 6. மைமனிய்யா, 7. கஸ்லிய்யா, 8. ஸாபிகிய்யா, 9. ஹபீபிய்யா, 10. கவ்பிய்யா, 11. ஹஸ்பிய்யா, 12. பிக்ரிய்யா எனப்படும்.
இவர்களின் கொள்கைகள்:
ஸதகா கொடுப்பது அவசியம் இல்லை இவர்களில் ஸாபிகிய்யாக்கள் வணக்கத்தை கொண்டு எந்த பிரயோசனமும் இல்லை பாவத்தை கொண்டு கெடுதியும் இல்லை என்றும் ஹஸ்பிய்யாக்கள் தவ்பாவையும், அல்லாஹ்வின் லிகாவையும் மறுக்கின்றார்கள்.
* கதரிய்யா என்ற இந்த மத்ஹபில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் :
1. அஹமதிய்யா, 2. ஸனவிய்யா, 3. ஷெய்த்தானிய்யா, 4. ஷரீகிய்யா, 5. வஹ்மிய்யா, 6. அபதிய்யா, 7. நாகிதிய்யா, 8. முதபர்ரிய்யா, 9. காஸிதிய்யா, 10. நிளாமிய்யா, 11. மும்தரிய்யா, 12. கைஸானிய்யா எனப்படும்.
இவர்களின் கொள்கைகள்:
நன்மையையும் தீமையும் உண்டாகிறது அல்லாஹ்வுடைய தக்தீரை கொண்டதல்ல, ஜனாஸா தொழுகை வாஜிப் அல்ல இவர்களில் அஹமதிய்யாக்கள் பர்லை ஒப்புக் கொண்டு ஸுன்னத்தை மறுக்கின்றார்கள். ஸனவிய்யாக்கள் நன்மைகளை படைக்க ஒரு இறைவனும், தீமைகளை படைக்க ஒரு இறைவனும் உண்டு என்றும், ஷெய்த்தானிய்யாக்கள் ஷெய்த்தான்கள் இல்லை என்றும் மறுக்கின்றார்கள்.
* ஜுஹைமிய்யா என்ற இந்த மத்ஹபில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் :
1. முஅத்தலிய்யா, 2. முராபிலிய்யா, 3. முதராகிபிய்யா, 4. வாரிதிய்யா, 5. ஹர்கிய்யா, 6. மக்லூக்கிய்யா, 7. கைரிய்யா, 8. பானிய்யா, 9. ஸனாதிகிய்யா, 10. லப்லிய்யா, 11.கப்ரிய்யா, 12. வாக்கிபிய்யா எனப்படும்.
இவர்களின் கொள்கைகள்:
ஈமான் கல்பி கொண்டதாக இருக்கும் நாவை கொண்டதல்ல, இஸ்ராயீல், முன்கர், நகீர் ஆகிய மலக்குமார்களையும், ஹவ்ஸுல் கவ்ஸர், ஸிராத்தல் முஸ்தகீம் பாலத்தையும் கேலி செய்வதாகும், இவர்களில் முஅத்தலிய்யாக்கள் அல்லாஹ்வின் அஸ்மா படைக்கப்பட்டது என்றும், கைரிய்யாக்கள் நமது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஒரு புத்திசாலியாக இருந்தார்களே தவிர ஒரு ரசூலாக இருக்கவில்லை என்று கூறுகின்றார்கள்.
* மர்ஜிய்யா என்ற இந்த மத்ஹபில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் :
1. தாரிகிய்யா, 2. ஷாஇய்யா, 3. ராஜிய்யா, 4. ஷாகிய்யா, 5. பைஹஷிய்யா, 6.அமலிய்யா, 7. மன்கூசிய்யா, 8. முஷ்தஸ்னிய்யா, 9. அப்தரிய்யா, 10. பிதய்யா, 11.முஷப்பிஹிய்யா, 12. ஹஷவிய்யா எனப்படும்.
இவர்களின் கொள்கைகள்:
ஈமானை தவிர வேறு ஒரு இபாதத்தும் பர்ளாக இல்லை இவர்களில் ஷாகிய்யாக்கள் ஈமானில் சந்தேகம் இருக்கின்றது என்றும், பைஹஷிய்யாக்கள் ஏவல் விலகல் அறியாதவன் காபிர் எனச்சி சொல்லுகின்றார்கள்.
வாய்வுத்தொல்லை (கேஸ்ட்ரபிள்) யால் பலர் படாதபாடு படுகிறார்கள். அவர்கள் காலையில்பிஸ்கட், பன், ரொட்டி என்று எதையும் உண்ணாமல் 11 பேரீச்சம்பழம் வீதம்தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் வாய்வுத்தொல்லைநீங்கி நல்ல குணம் பெறலாம்.
2. ஜைத்தூன்
ஷைத்தான் நெருங்காதிருக்க
“அலி!ஜைத்தூன் பழத்தைச் சாப்பிடுங்கள். அதன் எண்ணையைத் தேய்த்துக் கொள்ளுங்கள்.இவ்வாறு செய்வோரிடம் 40 நாட்களுக்கு ஷைத்தான் நெருங்க மாட்டான்” என்றுநபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் கூறினார்கள்.
வலி, வாதம், வீக்கம், மறுப்பு நீங்க
இடுப்புவலி, முதுகுவலி, கைகால் குடைச்சல், மூட்டுக்களில் வலி என்று இருப்பின்அந்த இடத்தில் ஜைத்தூன் எண்ணையைத் தடவி நன்றாகத் தேய்த்து விட்டால் வலி, குடைச்சல் எல்லாம் குணமாகிவிடும். கால் கைகள் அப்படியே சிலருக்கு மரத்துபோய்விடும். அப்போது இந்த எண்ணையை லேசாக சூடாக்கி அந்த இடத்தில்தேய்த்தால் மறந்து போனது நீங்கி இரத்த ஓட்டம் சீராகி விடும்.
“கர்ப்பிணிப்பெண்களுக்கு பேரிக்காய் உண்ணக கொடுங்கள். அதனால் குழந்தை அழகாகப்பிறக்கும். இதய அழுத்தம், இதயவலி (முதலிய நோய்கள்) ஏற்படாமல் இதயம் நன்குசெயல்படும்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள்கூறுகிறார்கள்.
4. கருஞ்சீரகம்
நினைவாற்றல் பெருகிட
அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் பத்துப் பதினைந்து கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வந்தால் நினைவாற்றல் பெருகும்.
குறிப்பு:கர்ப்பிணிப் பெண்கள் கருஞ்சீரகத்தை உபயோகிக்க கூடாது.
சர்க்கரை வியாதி நீங்கிட
இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி பரிபூரணமாக குணமாகி விடும்.
5. கோதுமை
இதய பலத்திற்கு
இதயமும், மூளையும் வலுவடைவதற்கும், வயிற்றுக் கிருமிகள் மற்றும் வயிற்றிலுள்ளகசடுகள் எல்லாம் நீங்கி இரைப்பை சுத்தமாக இருப்பதற்கும் தப்னியா (அதாவதுகோதுமை மாவில் பால் ஊற்றி பாயாசமாகக் காய்ச்சி இறக்கிய பின்பு தேவையானஇனிப்புக்கு தேன் கலந்த உணவை) உண்ணுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்.
சத்தான உணவு
தொலிக்கோதுமை ரொட்டித்துண்டை எடுத்து, அதில் பேரீச்சம்பழம் வைத்து, இதுவே சிறந்தசாலன்: இதுவே சிறந்த சாலன் என்று இரண்டு தடவை நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் சொன்னார்கள் என்று யூசுப்பின் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்: கோதுமையுடன் பேரீச்சம்பழம்சேர்த்த உணவை “எல்லா சத்துக்களும் நிறைந்த பரிபூரணமான உணவு” என்றுமருத்துவ ஆராய்ச்சியின் மூலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
6. உப்பு
பைத்தியம் ஏற்படாதிருக்க
கொஞ்சம்உப்பை உண்டு உணவை உண்ணத் தொடங்குங்கள். அவ்வாறே உண்டு முடிந்த உடனும்கொஞ்சம் உப்பை உண்ணுங்கள். அதனால் பைத்தியம், குஷ்டம், குடல் வியாதி, மற்றும் பல்வலி போன்ற எழுபது வியாதிகள் உங்களை அண்டாது என்று நபிகள்நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக அலீ (ரலியல்லாஹுஅன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்.
குளுமை குறைந்திட
வெள்ளரிக்காயைஉப்பில் தொட்டுத் தின்பார்கள், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அன்னவர்கள். அதனால் வயிற்றுக் குளுமை குறைந்து விடும் என்பார்கள்..இவ்வாறு தின்பதால் மார்புச்சளி, பித்தம் வெளியேறிவிடும். உண்ணும உணவுஜீரனமாகவும் செய்யும் என்று திப்புன்னபவியில் குறிப்பிடுகிறார்கள்.
7. இறைச்சி
உடல் அழகு பெற
இறைச்சிஇவ்வுலக மக்களுக்கும், நாளைய சொர்க்கவாசிகளுக்கும் சிறந்த உணவாகும்என்றும், இறைச்சி உண்ணுங்கள். அதனால் உடல் வளர்ச்சியடைந்து அழகு பெரும்.மேலும், மேனியின் நிறமும் மினுமினுப்பாகவும் இருக்கும் என்றும், இதைஉண்ணுவதால் உள்ளத்திற்கு ஆனந்தமேற்படுகிறது என்றும்நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள்.
உடல் சதைபோட
ஒருநாள்விட்டு ஒருநாள் இறைச்சி உண்ணுங்கள். அதனால் உடல் அழகுபெரும். உடலில்சதைபிடிப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியமாகும், சுறுசுறுப்பாகவும்இருக்கும். நாற்பது நாட்கள் இறைச்சி உண்ணாமலும் இருக்காதீர்கள். அதனால்குணம் கெட்டு விடும் என்று அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்.
8. முட்டை
ஆண்மைக் குறைவு நீங்க
யாரசூலஅல்லாஹ்! என்னுடைய ஆண்மை போதிய வலுவில்லாமல் இருக்கிறது. என்று ஒருஸஹாபி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம்முறையிட்டார்கள். அவருடைய ஆண்மைக் குறையை உணர்ந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் “முட்டையை உண்ணுங்கள். ஆண்மைஅதிகரிக்கும்” என்று ஏவினார்கள்.
தாது பலம் பெற
எல்லாம்வல்ல இறைவா! எனக்கு தாதுபலம் மிக்க குறைவாக இருக்கிறது என்று ஒரு நபிஅல்லாஹ்விடம் முறையிட்ட போது, “முட்டையை உண்ணுங்கள். தாது பலம் மிகும்” என்று அல்லாஹ் அந்த நபிக்குச் சொன்னான் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள்.
9. தேன்
பலஹீனமே இல்லாதிருக்க
தேனைப்பற்றியபழைய மருத்துவக் குறிப்பு இது. அதாவது அதிகாலையிலும், இரவில் நித்திரைசெய்வதற்கு முன்பாகவும் ஒரு வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்புஅதில் அரை எலும்பிச்சப்பழச்சாறையும், சேர்த்துச் சாப்பிட்டு வந்தால்
1. உடல் எப்போதும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்
2. ஜலதோஷம், இளைப்பு, நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் நீங்கிவிடும்.
3. குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கி விடும்.
4. குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்து விடும்.
5. இதய பாதிப்புக்கள் நீங்கி இதயம் பலம்பெறும்.
6. புதிய இரத்தம் அதிகமாக உற்பத்தியாகும்.
ஜீரண சக்திக்கு
நாம்உண்ணும உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரணஉறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பல சத்துக்களைத்தனித்தனியாக பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்பப்படுகிறது. இந்தஇரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரண சத்துகுறைந்திருப்பதால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால்ஜீரண உறுப்புகள் பலம் பெற்று விடும். இரைப்பையின் பணி கெட்டு விடுமானால்பின்பு உடம்பு அவ்வளவுதான்.
10. பால்
நோய்கள் வராதிருக்க
பாலில்தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய்களையும் எதிர்த்துநிற்கும் ஆற்றலை உடல் பெற்று விடும். இதன் மூலம் இதயபாதிப்பு நீங்கி இதயம்பழம்பெரும். மூளை சக்திபெரும். முகம் அழகாகவும், உடல் பளபளப்பாகவும்இருக்கும். ஜீரண சக்தி அதிகமாகும்.
நரம்புத்தளர்ச்சி நீங்க
பசும்பாலில்முருங்கைப்பீசினை இடித்துக் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி, உடல் நடுக்கம் மற்றும் நரம்புக்கோளாறுகள் எல்லாம் குணமாகும். (142) முருங்கைக்காயின் உட்பகுதிச் சதையையும் பாதாம் பருப்பையும் சேர்த்துஅரைத்து தினசரி காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் டி. பி நோய் வலிமைஇழந்து நாளடைவில் குணமாகி விடும். (143) தலைவலி நீங்க மிளகைப் பசும்பாலில்அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி குணமாகிவிடும்.
11. தண்ணீர்
ஜீரண சக்திக்கு
உணவில்இடையிலும், உணவு உண்டவுடனும் தண்ணீர் அருந்தினால் அஜீரணகோளாறுகள் ஏற்படும்என்றும் பழங்களைத் தின்றவுடன் தண்ணீர் அருந்தக்கூடாது அதனால் மரணம்ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும், குளித்தவுடன் தண்ணீர்குடித்தால் ஜலதோஷம் உண்டாகும் என்றும், ஐஸ் நீரை பொதுவாக அருந்தினால்பற்கள் சீக்கிரம் ஆட்டம் கண்டுவிடும் என்றும், தொண்டைக்கட்டி வலிஉண்டாகும், இரைப்பையில் ஊறும் ஜீரணநீர் குறைவாகவே சுரக்கும் என்றும், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் உடல் பலஹீனமடைந்துஇளைத்து விடும் என்றும், பூமிக்கு அடியில் ஓடும் தண்ணீரும் கிணற்றில்தேங்கிக் கிடக்கும் தண்ணீரும் கெடுதல் தரக்கூடியவை என்றும், கிணற்றுத்தண்ணீரையும், ஆற்றுத் தண்ணீரையும் கலந்து குடிப்பது உடல்நலத்தைக் கெடுத்துவிடும், அவ்வாறே வெந்நீரையும், தண்ணீரையும் கலந்து குடிப்பது உடல் நலத்தைபாதிக்கும் என்றும் ஜாலீனுஸ், அப்கராத் அபூநயீம் போன்ற மருத்துவ மேதைகள்கூறுகிறார்கள்.
12. மழைத் தண்ணீர்
எல்லா நோய்களும் நீங்கிட
“எனக்குஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஒரு மருந்தை கற்றுத்தந்தார்கள்.அம்மருந்து ஒன்றே போதும். வேறு எந்த மருந்தும் தேவை இல்லை. எல்லாம் வல்லஅல்லாஹ் எல்லா நோய்களையும் இந்த ஒரு மருந்தின் மூலமே குணப்படுத்திவிடுவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஒருசமயம் ஸஹாபாப் பெருமக்களிடம் கூறியபோது, அபூபக்கர், உமர், உஸ்மான், அலீ (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகிய நாற்பெறும் ஸஹாபாக்களும் அதை தத்தமக்குக்கற்றுத்தருமாறு வேண்டினார்கள். அப்போது “வேறு எதிலும் படாத சுத்தமான மழைத்தண்ணீரில் ஃபாத்திஹா, இக்லாஸ், ஃபலக், நாஸ் ஆகிய நான்கு சூராக்களையும்எழுபது எழுபது தடவை ஓதி அதில் ஊதி வைத்துக் கொண்டு, எப்படிப்பட்ட நோயால், செய்வினை மற்றும் கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களும் காலையும், மாலையும் தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால் என்னை நபியாக அனுப்பியஅல்லாஹ்வின் மீது ஆணையாக் நிச்சயம் அந்த நோய் நீங்கிவிடும். மலட்டுத்தன்மைஉடையவர் இவ்வாறு இதைக் குடித்து வந்தால் நிச்சயம் மலட்டுத்தன்மை நீங்கிகுழந்தை பெறுவார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அன்னவர்கள் அருளினார்கள்.
13. ஜம்ஜம்
நினைத்தது நிறைவேற
“இந்தஜம்ஜம் நீரை எந்த எண்ணத்துடன் யார் அருந்துகிறோமோ அது அவருக்குநிறைவேறும். நான் மறு உலகில் தாகமில்லாதிருக்க இதை அருந்துகிறேன்” என்றுநபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக இப்னுமுபாரக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்.
14. சுர்மா
கண்ணொளி பெருகிட
நீங்கள்தூங்கப்போகும் முன்பு சர்மாவை உங்களுடைய கண்களில் இட்டுக் கொள்ளுங்கள்.நிச்சயமாக இது கண்களுக்கு கூடுதல் ஒளிதரும். இமை முடிகளை முளைப்பிக்கச்செய்யும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள்கூறியதாக ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்அறிவிக்கிறார்கள்.
15. பூண்டு
புண்கள் ஆறிட
பூண்டைபால் விட்டு அரைத்து புண்கள், வெயில் கொப்பலங்களில் வைத்தால் விரைவில்ஆறிவிடும். புண் ஆணையைக் கூட வெளியாக்கிவிடும். இன்னும் அநேக மருத்துவகுணங்கள் பூண்டிற்கு உண்டு. ஆனால் மூல வியாதியஸ்தர்கள் பூண்டைஉபயோகிக்ககூடாது.
1. பக்காவாததிற்கு நல்லது. இதை வேகவைத்து வைகொப்பளித்தால் பல்வலி நீங்கிபற்கள் உறுதிப்படும். நவாச்சாரத்துடன் கலந்து வேன்குஷ்டத்திற்கு பத்துப்போட்டால் அது குணமாகும்.
2. பல தன்நீர்களை குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் பூண்டு சாப்பிட்டால் போதும். அந்தத் தண்ணீரால் எந்த தீமையும் ஏற்படாது.
3. தேள், பின்பு கடித்து விடாத்ல் பூண்டைத் தட்டி கடிவாயில் பத்துப் போட்டால் குணமாகி விடும்.
16. மருதோன்றி இலை
வயிற்றுவலி, தலைவலி நீங்க
நபிகள்நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு தலைவலிக்குமானால்மருதொன்றியை அரைத்து தலைக்கு பத்து போடுவார்கள். மேலும் அல்லாஹ்வின்ஆணையால் இது நிச்சயம் பலன் தரும் என்றும் கூறுவார்கள்.
17. அத்திப்பழம்
உடல் அழகு பெற
உடலைஅழகாகவும், மினுமினுப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க வேண்டும்என்பதற்காக வசதியுள்ளவர்களும், இல்லாதவர்களும் எவ்வளவோ செலவு செய்து, எங்கெல்லாமோ சென்று, எதையெல்லாமோ செய்கிறார்கள். அதனால் நாளடைவில் உடல்அழகு குறைவதோடு ஆரோக்கியமும் கெட்டுவிடும். ஆனால் அதிகாலையில் வெறும்வயிற்றில் அத்திப்பழத்தைச்சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும்நாளுக்கு நாள் அதிகமாகும் என்று அரபிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
18. அதிமதுரம்
தொண்டைவலி நீங்க
பால்குடிபருவத்தில் குழந்தைக்கு தொண்டையில் ஒருவித அடைப்பு போன்ற வியாதி ஏற்படும்.அதைப் போக்குவதற்காக தாய்மார்கள் அரபிய நாட்டில் குழந்தையின் வாயில் விரலைவிட்டு அழுத்துவார்கள். (நம் நாட்டிலும் சில இடங்களில் இப்படிசெய்வதுண்டு) இதைக்கண்ட நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அன்னவர்கள் இது மிகவும் தீங்கானது என்பதை உணர்ந்து “தங்களுடையகுழந்தைகளுக்கு தொண்டை வியாதி ஏற்பட்டால் விரல்விட்டு அழுத்தி வேதனைசெய்யாதீர்கள். அதற்குப் பகரமாக அதிமதுரக்குச்சியை உபயோகப்படுத்துங்கள்” என்று அருளிய ஹதீஸை அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மாதத்தீட்டு ஒழுங்காக வர
சிலபெண்களுக்கு சரியாக மாதாமாதம் தீட்டு வராமல் கஷ்டப்படுவார்கள். அவ்வாறேசில பெண்கள் தீட்டுக்காலத்தில் வயிற்று வழியால் சிரமப்படுவார்கள். அப்போதுஅதிமதுரக்குச்சியைச் சாப்பிட்டு வந்தால் தீட்டு சரியாக வர ஆரம்பித்துவிடும். வயிற்று வழியும் நீங்கி விடும்.
19. முள்ளங்கி
பசி உண்டாக
முள்ளங்கியை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் நல்ல பசி ஏற்படும்.
1. தாதுபலம் மிகப்பலமாக இருக்கும்.
2. கிட்னியில் சேரும் கற்களைக் கரைத்து விடும்.
3. நரம்புத் தளர்ச்சியைப் போக்கி உடலுக்கு நல்ல வலுவேட்படுத்தும்.
4. முடி உதிர்வதைத் தடுத்து அது நன்கு வளர்ச்சியடையச் செய்யும்.
5. முள்ளங்கியை அவ்வப்போது சமைத்து உண்டுவந்தால் தொண்டை சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கி விடும். குரல் இனிமையாகும்.
6. முள்ளங்கியைத் தட்டி தேள், பாம்பின் கடிவாயில் வைத்து கட்டினால் விஷம் இறங்கி விடும்.
7. இறைப்பைவலி, வயிற்றுவலி, வயிற்று எரிச்சல் ஏற்பட்டால் முள்ளங்கியைச் சாப்பிட்டால் குணமாகி விடும்.
8. முள்ளங்கியைத் தட்டிச்சாறெடுத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கல் அடைப்பு வியாதி குணமாகிவிடும்.
9. முள்ளங்கி விதையை வெயிலில் காய வைத்து நன்கு தட்டி தேன் கலந்துலேகியமாக்கி வைத்துக்கொண்டு திமமும் இரவில் தூங்கப்போகும் முன்பு கொஞ்சம்சாப்பிட்டு பால் அருந்தி வந்தால் நீண்ட நேரம் தாம்பத்திய சுகம் பெறுவதற்குஇதைவிடச் சிறந்த மருந்து இனியொன்று இல்லை.
20. மாதுளம்பழம்
ஷைத்தான் விரண்டோட
எந்தவயிற்றில் மாதுளைப்பழத்தின் ஒரு விதைப்பட்டு விடுகிறதோ அதன் காரணம்அவருடைய இதயம் பிகாசிக்கும்.(அதாவது இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள்நீங்கிநன்கு செயல்படும்) மேலும் நாற்பது நாட்களுக்கு ஷைத்தான் அண்டுவதில்லை.விரன்டோடி விடுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அன்னவர்கள் கூறுகிறார்கள்.
கண்ணோய் நீங்கிட
மாதுளைமொட்டை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவிட்டால் ஒரு வருடத்திற்குகண்வலி, கண்ணில் நீர் வடிதல், பூளை தள்ளுதல் போன்ற கண் சம்பந்தப்பட்ட எந்தவியாதியும் வராது என்றும், மூன்று மாதுளை வித்தை விழுங்கி விட்டால் ஒருவருடத்திற்கு கண்ணில் பூளை தள்ளாது என்றும் திப்புன்னபவியில்கூறப்படுகிறது.
இரத்தம் சுத்தமாக
இரத்தநாளங்களில் கொழுப்பு, அல்லது ஒருவிதமான கரைபடித்து அடைத்துக் கொண்டால்இரத்த ஓட்டம் தடைபடும். அப்போது இதயபாதிப்பு ஏற்படும். இது அதிக உணவுஉண்ணுவதால் ஏற்படுகிறது. இதற்கு அவ்வப்போது மாதுளைப்பழம் சாப்பிட்டுவந்தால் இரத்த ஓட்டத்தைத் நீங்கி விடும். மேலும் இரத்தத்தைச்சுத்தப்படுத்தி நல்ல இரத்தம் நிறைய ஊற உதவும்.
1. வாதம், கபம், அஜீரணம், வீக்கம், வலி இவைகள் நீங்க மாதுளைப்பழம் சிறந்த உணவாகும்.
2. தாதுபுஷ்டிக்கு இது நிகரற்ற நல்ல மருந்தாகும்.
3. மேனியை மினுமினுப்பாக்கி உடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க இது உதவுகிறது.
4. நெஞ்சு வலிக்கு இது நல்லது. மேலும் தொண்டை கரகரப்பை நீக்கி குரல் இனிமைபெறஉதவும். மாதுளைப்பழத்தை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அன்னவர்கள் விரும்பி உண்டிருக்கிறார்கள்.
21. சுரைக்காய்
மூளை பலத்திற்கு
சுரைக்காய்சமைத்து விரும்பி உண்ணுங்கள். அது மூளைக்கு அதிக பலத்தைத் தரும். மேலும்அது வளர்ச்சி அடையும் ஒரு சமயம் அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)அவர்களிடம் “ஆயிஷா! நீ சமைப்பது எனில் சுரைக்காயை (கறியுடன் சேர்த்து)அதிகமாக சமை. அது மனக்கவலையைப் போக்கி விடுவதோடு, நெஞ்சுக்குப் பலமும்தரும்” என்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள்கூறினார்கள்.
மூத்திரம் கோளாறுகள் நீங்க
பலகாய்கறிகள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் பிரியமாகஉண்டிருக்கிரார்கள் என்றாலும் சுரைக்காயின் மீது தனிப்பட்ட விருப்பம்கொண்டு பிரியமாக உண்டிருக்கிறார்கள். அதிலும் இறைச்சியில் சுரைக்காயைச்சேர்த்து சமைக்கப்பட்ட சால்னாவை கோதுமை ரொட்டியில் ஊற்றிச் சாப்பிடுவதில்நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு அலாதிப் பிரியம்இருந்தது. சுரைக்காய் சிறுநீர் நன்கு வெளிப்படுத்தும். மேலும் மூத்திரக்கோளாறுகளை நீக்கும்.
22. வெள்ளரிக்காய்
உடல் பருமனாக
ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகிறார்கள்: “நான் மிகவும் ஒல்லியாகஇருந்தேன். நான் சதைபோட வேண்டும் என்பதற்காக எனக்கு என்னுடைய தாயார் பலமருந்துகளையும் செய்து பார்த்தார்கள். பலவிதமான பொருட்களைஉண்ணக்கொடுத்தார்கள். அப்போதும் எனது உடலில் சதை பிடிப்பு ஏற்படவில்லை.பின்பு பேரீச்சப்பழத்தையும், வெள்ளரிக்காயையும் சேர்த்து எனக்கு உண்ணககொடுத்தார்கள். அதனால் சில நாட்களில் நான் பருமனாகி விட்டேன். (பொதுவாகஒல்லியாக உள்ள பெண்கள் சதைபோட இது சிறந்த உணவாகும்)
23. இஞ்சி, சுக்கு
ஜலதோஷம் நீங்கிட
கொஞ்சம் இஞ்சிச்சாறும், தேனும் சமஅளவு கலந்து மூன்று நாட்களுக்கு காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் பறந்து விடும்.
1. சுக்கு, வெள்ளைப்பூண்டு, குறுமிளகு இம்மூன்றையும் சமஅளவு எடுத்து, தட்டிபொடியாக்கி தேனில் குலைத்து சாப்பிட்டு வந்தால் மூலக்குரு நீங்கி விடும்.அதன் வேர் அப்படியே அடியோடு அறுந்து விடும்.
2. சுக்கைத் தட்டி பாலில் கலந்து குடிக்க வேண்டும். அதையே மேனியில் தேய்க்கவும் செய்தால் பாம்புக்கடி விஷம் இறங்கி விடும்.
3. வாந்தி வருவது போன்று தோன்றினால் சுக்கை கொஞ்சம் வாயிலிட்டால் உடனே வாந்தி நின்று விடும்.
24. தயிர், மோர், வெண்ணை, நெய்
தாதுபுஷ்டிக்கு
பேரீச்சம்பழமும், வெண்ணையையும் சேரத்துச் சாப்பிட்டால் தாதுபுஷ்டிக்கு நிகரற்றது என்றுநபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள்.குரல் இனிமை தருவதற்கும் இது நல்ல உணவாகும்.
1. தேனும் வெண்ணையும் சேர்த்துச் சாப்பிட்டால் விழ மூட்டுக்களில் உண்டாகும் வலி நீங்கிவிடும்.
2. தயிரும், அக்ரூட்டும் வெவ்வேறு குணங்களைக் கொண்டதாகும். இவற்றைத் தனித்தனியாகச் சாபிட்டால் உடல் நலம் கெட்டுவிடும். ஆனால் இரண்டையும் சேர்த்துசாப்பிட வேண்டும் என்றும் அதனால் இரண்டின் குணங்களும் சமநிலைப்பட்டு உடல்நலத்தையும், ஆரோக்கியத்தையும் பெற்றுத்தரும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அருளிய ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
25. காளான்
கண்ணோய் குணமாகிட
ஹஸ்ரத்அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். ஒரு சமயம் சிலஸஹாபாக்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வருகைதந்து “காளான் பூமியின் அம்மை நோய்” என்று முறையிட்டார்கள். அப்போது “காளான் (பாலைவனத்தில் பனூ இஸ்ராயீல் சமூகத்தாருக்கு அல்லாஹ் வழங்கியமேலான உணவான) “மன்” எனும் உணவு வகையைச் சேர்ந்ததாகும். அதன் நீர்கன்னோயகளை குணப்படுத்தும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அன்னவர்கள் கூறினார்கள். இதற்குப் பின்பு நான் நான்கு ஐந்து காளான்களைபிடுங்கி கசக்கி சாறெடுத்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்திருந்தேன். எனதுஅடிமைப் பெண்ணுக்கு அடிக்கடி கண்களிலிருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது.அப்போது கண்கள் வலிக்கவும் செய்தன. அதற்கு இந்த காளான் நீரை கண்ணுக்குஇட்டு வந்தேன். குணமாகி விட்டது னென்று அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள் கூறுகிறார்கள்.
26. எள்
தொண்டை வறட்சி நீங்கிட
எள் சாப்பிட்டால் வறட்சி, கரகரப்பு நீங்கி விடும். குரல் இனிமையாக இருக்கும்
1. எள்ளுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் இரைப்பை சுறுசுறுப்படையும்.
2. நரம்புத்தளர்ச்சி நீங்கி பலம் பெரும், மேனி மினுமினுப்பாக இருக்கும்.
3. முடி கருப்பாகவும் நீளமாகவும் வளர்ச்சி அடையும்.
4. நல்லெண்ணையை உணவில் ஊற்றிச் சாப்பிட்டால் குடல் புண்களை ஆற்றும். உடல் உஷ்ணத்தை தனித்து விடும்.
5. கர்ப்பம் தரிக்காதிருக்க எள் கைகண்ட மருந்தாகும். உடலுறவு கொண்ட பின்புஅதிகாலையில் வெறும் வயிற்றில் எள்ளும் சர்க்கரையும் சேர்த்து (எள்ளுருண்டை) சாப்பிட்டால் கர்ப்பறையில் சேர்ந்துள்ள விந்தின் ஜீவாஅணுக்களை கலைத்து விடும். அதனால் கருத்தரிக்க மாட்டாது. மேலும் உடலுறவுகொள்ளும் போது ஆண் உறுப்பில் நல்லெண்ணையைத் தடவிக்கொண்டு உறவு கொண்டாலும்கருத்தரிக்காது.
27. திராட்சைப்பழம்
இரத்தம் சுத்தியாக
திராட்சைப்பழம்சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். உடலில் பலமும் தைரியமும் ஏற்படும்.உடலில் சதைப்பிடிப்பு உண்டாகும். பித்தக்கோளாறுகளைப் போக்கி விடும்.ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் “திராட்சைப் பழத்தைஉண்ணுங்கள். அதன் கொட்டையை வீசி எறிந்து விடுங்கள். ஏனெனில்திராட்சைப்பழம் (ஷிஃபா) நோய் நிவாரநியாகும். அதன் கொட்டை நோயாகும் என்றுநபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அருளியதாகஅறிவிக்கிறார்கள்.
அழகான தோற்றத்திற்கு
உலர்ந்ததிராட்சை அதிகமான நோய்களை நீக்கும் சிறந்த மருந்தும் உயர்ந்த உணவுப்போருளுமாகும். ஒரு சமயம் உலர்ந்த திராட்சையை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டு அது அவர்கள்முன்னால் வைக்கப்பட்டது. அப்போது அவர்கள் ஸஹாபாப் பெருமக்களிடம் “இதைச்சாப்பிடுங்கள். இது கோபத்தைத் தனித்து விடும். கபத்தை வெளியேற்றி விடும்.நல்ல நிறத்தை உண்டு பண்ணி அழகான தோற்றத்தை தரும். வாய் நாற்றத்தைபோக்கும், நரம்புத் தளர்ச்சியை நீக்கி பலப்படுத்தும்” என்று கூறினார்கள்என தமீமுத்தாரமீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்.
28. பழரசம்
உடல் பலத்திற்கு
அன்னைஆயிஷா ஸித்தீக்கா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் “நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்காக காலையில் பழங்களைப் பிழிந்துஜூஸ் செய்து வைப்போம். அதை மாலையில் அவர்கள் சாப்பிடுவார்கள். அவ்வாறேமாலையில் ஜூஸ் செய்து வைப்போம், அதை அவர்கள் காலையில் சாப்பிடுவார்கள்.ஆனால் ஒவ்வொரு தடவையும் காலையிலும், மாலையிலும் பழங்களை பிழிந்தபாத்திரத்தை அவசியம் கழுவி வைப்போம்” என்று கூரினார்கள். இம்முறைப்பிரகாரம் பழரசம் சாப்பிடுவது உடலுக்கு நல்ல வலுவைத் தரும். மேலும், ஒருதடவை ஜூஸ் பிழிந்து விட்டப் பாத்திரத்தைக் கழுவிய பின்புதான் அடுத்த தடவைஜூஸ் பிழிய வேண்டும். அதுவே சுகாதாரமாகும். கழுவாமல் வைத்திருந்தால்பழங்களிலுள்ள சர்க்கரையின் காரணம் ஈ, எறும்பு மற்றும் காற்றிலுள்ளகிருமிகள் வேகமாக அந்தப் பாத்திரத்தை தொடுகின்றன. அதனால் சுகாதாரக்கேடுகள் ஏற்பட்டு நோய் நொடிகள் விளைகின்றன.
29. சிர்க்கா
வயிற்றுக் கோளாறுகள் நீங்க
ஆயிரக்கணக்கானவயிற்றுக் கோளாறுகளை நீக்குவதிலும், இரைப்பையை சுத்தப்படுத்தி வலுவூட்டி, ஜீரண சக்தியை விரைவில் ஏற்படுத்துவதில் சிர்க்கா வல்லதாகும். குறிப்பாகமழைக்காலத்திலும், குளிர்க்காலத்திலும் நல்ல பலனைத்தரும். கருஞ்ஜீரகத்தைதட்டி சிர்க்காவில் கலந்து தேமல், கருந்தேமல், படர்தாமரை, ஊறல் போன்ற தொல்சம்பந்தப்பட்ட வியாதிகளில் தேய்த்து வந்தால் அவை குணமாகி விடும்.
ஆறாத புண்கள் ஆற
சிர்க்காவைபஞ்சு அல்லது துணியில் நன்கு நனைத்து ஆறாத புண்கள் நீண்ட நாட்களாக உள்ளபுண்கள், புரையோடிய புண்களில் கட்டினால் வேதனை, வலி, வீக்கம் நீங்கிவிரைவில் புண்கள் ஆறிவிடும். புண்களில் இருந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தாள் அல்லது சிருமூக்கு உடைந்து இரத்தம் வடிந்தாலும் சிர்க்காவைதடவினால் இரத்தம் வடிவது நின்று விடும்.
30. கஸ்தூரி
மரத்த நிலை நீங்க
சிலநேரங்களில் இரத்த ஓட்டக் குறைவால் உடல் மரத்து விடும். அப்போதும் அந்தஇடத்தில் கஸ்தூரியை கொஞ்சம் தேய்த்து விட்டால் மரத்துவிட்ட நிலை நீங்கிவிடும்.
1. கஸ்தூரியை உபயோகிப்பது மற்றும் நுகர்வதால் நீர்த்துப்போன விந்து கட்டிப்பட்டு தாதுபலம் பெற்று நீண்ட நேர போக உகம் பெறலாம்.
2. மயக்கமுடையவருக்கு இதை நுகரச் செய்தால் உடனே மயக்கம் தெளிந்து எழுவார். இதயக் கோளாறுகளும் இதனால் நீங்கிவிடும்.
3. விஷ பொருட்களை உண்டுவிட்டாலோ, விஷ ஜந்துக்கள் தீண்டி விட்டாலோ கஸ்தூரியைநீரில் கலந்து கொஞ்சம் குடித்தால் கடுமை குறைந்து விஷம் இறங்கிவிடும்.மேலும் இதனால் உள்ளுறுப்புகள் பழம் பெறும்.
31. ரோஜாப்பூ
குல்கந்து
நல்லநிறமும், மலர்ந்து விரிந்த பெரிய தரமும் உள்ள ரோஜா பூக்களின் இதழ்களைஆய்ந்து புழு பூச்சிகள் இருப்பின் அவற்றை நீக்கி சுத்தப்படுத்தி பின்புரோஜா இதழ்களின் எடையைப் போன்று மூன்று மடங்கு எடை கற்கண்டு சேர்த்துஇரண்டையும் சுத்தமான கல் உறவில் கொஞ்ச கொஞ்சமாக இட்டு இடிக்க வேண்டும்.நன்கு இடித்து லேகிய பக்குவமான பின்பு வாயகன்ற கண்ணாடி அல்லது பீங்கான்பாத்திரத்தில் இட்டு, அதில் மூன்றில் ஒரு பங்களவு சுத்தமான நல்ல தேன்ஊற்றி நன்றாக கிளறி விட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதுவே குல்கந்து.கடைகளில் விற்பதை வாங்குவதை விட நாமே தயாரித்துக் கொள்ளும்போதுசுத்தமாகவும், விலை குறைவாகவும் இருக்கும். இன்னும் ருசி வேண்டுமெனில்கசகசாவை இளஞ்சூட்டில் லேசாக வறுத்து அதில் சேர்த்துக் கொள்ளலாம். உடல்போஷாக்கிற்கு உன்னதமான டானிக்காகும் இது. இதை உண்டு வந்தால் மலச்சிக்கல்ஏற்படாது. இரத்த விருத்தி ஏற்படும். உடல் நன்கு மினுமினுப்பாகவும், தளதளஎன்றும் இருக்கும்.
32. அரிசி
இந்திரிய உற்பத்திக்கு
அரிசிஉணவு இந்திரியத்தை நிறைய உற்பத்தி செய்வதோடு அதை நேர தாம்பத்தியசுகத்தைத்தரும். அரிசியில் தண்ணீருக்குப் பகரமாக பாலூற்றிச் சமைத்துசர்க்கரை அல்லது கல்கண்டு சேர்த்து பாயாசமாக வைத்துச் சாப்பிட்டால்முகவீக்கம் மற்றும் ஒற்றைத் தலைவலி குணமாகிவிடும். மூன்று நாட்களுக்குசாப்பிட வேண்டும். அரிசி உணவு பரக்கத் பெற்ற உணவாகும். ஆதலால் அதைஉண்ணுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள்கூறுகிறார்கள்.
33. பருப்பு
மூளை வளர்ச்சி
பருப்பைஉண்ணுங்கள்: அது பரக்கத் பெற்ற உணவாகும். அதனால் மூளை வளர்ச்சியடையும்.இதயத்திற்கு மிகவும் நல்லது என்றும் 70 நபிமார்கள் பருப்பின் மூலம்பரக்கத் பெற்றிருக்கிறார்கள் அவர்களில் கடைசி (நபி) ஈசா (அலைஹிஸ்ஸலாம்)அவர்களாவார்கள் என்றும் அதனால் கண்வலி வராது என்றும் பெருமை எனும் கெட்டகுணம் பருப்பால் நீங்கி விடும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். பருப்பை அதிகம் உண்டால் பார்வைமங்கிவிடும். பருப்பைத் தட்டி அம்மை புண்களுக்கு வைத்தால் அது ஆறிவிடும்.
34. மீன்
உடல் கொழுத்திட
மீனைஉண்டுவந்தால் உடல் கொழுத்துப் பெருத்து விடும். பொறித்த மீனை தின்றுவந்தால் விந்து கெட்டிப்பட்டு தாது சக்தியை நிறைவாகப் பெறலாம். ஆனால்விரைவில் ஜீரணமேற்படாமல் தாமதமாகவே ஏற்படும். சேறும் சகதியும் உள்ளகுட்டைகளிலுள்ள மீனை உன்னவது நல்லதல்ல. அதனால் உடல் கெட்டுவிடும்.உப்பில்லாத நல்ல தண்ணீரிலுள்ள மீனே மிகவும் நல்லது. கருவாடு சூடானது. அதைஅதிகம் உண்டால் அரிப்பும், சொறி சிரங்கும் ஏற்படும். அதிகம் முள் உள்ளமீனை உண்ணக்கூடாது.
35. கரும்பு
கரும்புசாப்பிடுங்கள்: அது வயிறு நிறைய உண்டவனுக்கு ஜீரணத்தை கொடுக்கும்!பசித்தவனுக்கு வயிறை நிரப்பும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள்.
1. கரும்பு தாம்பத்திய சுகத்திற்கு நல்லது, நெஞ்சுவலிக்கும் நல்லது. மேலும்அதனால் இருமல் மற்றும் வயிற்றுக்கோளாறுகள் நீங்கிவிடும். ஆனால் அதனால்சிறுநீர் அதிகம் போகும் என்று கிதாபுல் பரக்கத் எனும் நூலில்கூறுகிறார்கள்.
2. மருந்தே இல்லாதவருக்கும் திராட்சை, கரும்பு, ஓட்டகைப்பால் ஆகிய மூன்றுமருந்துகள் போதும். எல்லா நோய்களையும் இவை நீக்கிவிடும் என்று இமாம் ஷாஃபி (ரஹ்மாதுல்லாஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள்.
36. குங்குமப்பூ
குங்கும நிறத்தில் குழந்தை பிறந்திட
கருத்தரித்தநான்காவது மாதத்திலிருந்து இரவில் தூங்கப்போகும்போது ரோஜாப்பூ குல்கந்துகொஞ்சம் சாப்பிட பின்பு ஒரு டம்ளர் பசும்பாலில் நயம குங்குமப்பூ கொஞ்சம்இட்டு கலக்கி சிறிது நேரம் கழித்து சாப்பிட்டு உறங்க வேண்டும். இவ்வாறுதொடர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால் எந்தவிதமான இடையூறுகளுமின்றிசுகப்பிரசவம் ஏற்படுவதோடு குழந்தையும் குங்குமப்பூ நிறத்தில் அழகாகவும், புஷ்டியாகவும் கொழுகொழு என்றும் இருக்கும். கண்ட கண்ட டானிக்குகளையும்மருந்துகளையும் சாப்பிட்டு உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்வதோடு பணச்செலவுகளையும் ஏராளமாகச் செய்து சிரமப்படுவதை விட இது அற்புதமும், ஆரோக்கியமும் நிறைந்த கைகண்ட மருத்துவக் குறிப்பாகும். இதேமுறைப் பிரகாரம்ஏழுநாட்களுக்கு ஆண்கள் சாப்பிட்டால் நல்ல வண்ணமாக தாது புஷ்டி உண்டாகும்.
37. தர்பூஜ் பழம்
1. கர்ப்பிணிப் பெண்கள் இந்தப் பழத்தை அதிகமாக சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை அழகாகவும், புஷ்டியாகவும் இருக்கும்.
2. இந்தப்பழம் பசி தீர்க்கும் உணவும், தாகம் தீர்க்கும் தண்ணீருமாகும்.மூளைக்கு குளிர்ச்சியை கொடுத்து அதை பலப்படுத்தும். முதுகந்தண்டில்தேவையான அளவு நீரை உற்பத்தி செய்யும். வயிற்றுத் தொந்தரவுகளை நீக்கிவிடும். மேலும் தாம்பத்திய சுகத்தை அதிகப்படுத்தும் என்று இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்.